அரசியல் கட்சிகள் தங்கள் செலவுகளுக்காக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் நிதி வசூலித்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
தேர்தல் பத்திரம் மூலமாகவும், காசோலை வாயிலாகவும் நன்கொடைகளை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு நிதி வசூல் செய்து அரசியல் கட்சிகள் ஏராளமான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளன.
இது சம்பந்தமாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அனைத்துக் கட்சிகளுடைய சொத்து விவரங்களை தணிக்கை செய்து அதுபற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன்சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5,349 கோடியாக உள்ளது.
இதில் பாரதிய ஜனதா கட்சியில் மட்டும் ரூ.2,904 கோடி சொத்து இருக்கிறது. இது மொத்த தேசிய கட்சிகளின் சொத்துக்களில் 54.29 சதவீதமாகும்.
அனைத்து மாநில கட்சிகளின் சொத்து ரூ.2,023 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த கட்சிகளில் உள்ள பணத்தில் 58 சதவீதம் 7 தேசிய கட்சிகளிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.