X

பாரதியாரின் 140 வது பிறந்தநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

மகாகவி பாரதியார் 140-வது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

அரசு சார்பில் சென்னையிலும் எட்டையாபுரத்திலும் விழாக்கள் நடத்தப்பட்டன.

பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தள பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது-

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!

திறம்பாட வந்த மறவன்!

அறம்பாட வந்த அறிஞன்!

படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று!

தமிழுக்குத் தொண்டுசெய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.