Tamilசெய்திகள்

பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சட்டசபையில் 110 விதிகளின் கீழ் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

* மொழி, உணர்ச்சி, மொழி, மானம், மொழி பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம் பாவேந்தர் பாரதிதாசன்.

* பாரதிதாசன் எழுத்துகளை மேற்கோள்காட்டி பேசாத தலைவர்களே இல்லை.

* பல இளம் கவிஞர்களை உருவாக்கியவர் பாவேந்தர் பாரதிதாசன்.

* பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.25 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்.

* தமிழர் உணர்விலும் குருதியிலும் கலந்த புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளை ஒட்டி தமிழ் வார விழா கொண்டாடப்படும்.

* கவிஞர் பாரதிதாசனை போற்றும் வகையிலான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்.

* பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடைபெறும்.

* தமிழ் இசை, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மாநிலம் முழுவதும் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

* பாரதிதாசன் பிறந்தநாள் தமிழ் மணக்கும் வாரமாக கொண்டாடப்படும்.

* தமிழகம் முழுவதும் அரசின் சார்பில் கொண்டாடப்பட உள்ள தமிழ் வார விழாவில் திரளாக பங்கேற்கு தமிழ் புகழை உயர்த்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.