இசையமைப்பாளர் இளையராஜா பாடல் உரிமை தனக்கே சொந்தம் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது முதல் இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு இசை பெரிதா? மொழி பெரிதா என்ற கேள்விக்கு பதில் அளித்து கூறும்போது, “சினிமா துறையில் எல்லா விஷயங்களுமே கூட்டு முயற்சியால் தான் நடக்கிறது. எது பெரிது என்ற விஷயத்தை இயக்குனரும், இசையமைப்பாளரும் தான் பேச வேண்டும். இளையராஜாவுக்கும், வைரமுத்துக்கும் இடையே பிரச்சினை இருந்தால் அவர்கள்தான் பேச வேண்டும்” என்றார்.
தயாரிப்பாளர்கள் இசை எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறுவது குறித்து ஒரு தயாரிப்பாளரான உங்களின் கருத்து என்ன என்று கேட்டபோது, `மீண்டும் சொல்கிறேன். ஒரு படம் தயாராவது கூட்டு முயற்சியால் தான். இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை” என்றார்.