பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீடு சென்னை அபிராமிபுரத்தில் உள்ளது. இந்த வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக அவரது மனைவி தர்ஷணா பாலா அபிராமிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி இந்த தங்க நகைகளை பார்த்ததாகவும் அதன்பின்னர் பிப்ரவரி மாதம் வீட்டில் நகைகளை பார்த்தபோது காணவில்லை எனவும் வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரளித்துள்ளார்.
இது தொடர்பாக அபிராமிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் ஆகியோரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் மாயமானது குறிப்பிடத்தக்கது.