பாஜக மகாராஷ்டிராவை பாலைவனமாக்க விரும்புகிறது – ஆதித்யா தாக்கரே குற்றச்சாட்டு
மும்பைக்கு குடிநீர் வழங்கும் வகையில் கார்காய் அணை கடட பரிந்துரை வழங்கப்பட்டு்ளது. இதற்கான லட்சணக்கான மரங்கள் வெட்ட பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தை பாஜக பாலைவனமாக்க விரும்புகிறது என அதித்யா தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-
இந்த வருடம் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் மும்பையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை இதற்கு முன்பாக ஒருபோதும் பார்த்ததில்லை. மாநிலம் முழுவரும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துகிறது.
மாமநில வனவிலங்கு வாரியம் லட்சகணக்கான மரங்களை வெட்டுவதற்கான திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. தானே மற்றும பல்கார் மாவட்டத்தில் ஐந்து லட்சம் மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டள்ளது. மும்பைக்கு குடிநீ்ர் வழங்க கார்காய் அணை கட்டுவதற்கான இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாஜக மகாராஷ்டிராவை பாலைவனமாக்க விரும்புகிறது. தேவைப்பட்டால் சிவசேனா (UBT) மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர், ஜனாதிபதியை இந்த திட்டத்திற்கு எதிராக அணுகும்.
இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.
மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியில் (2019 முதல் 2022 வரை) இருக்கும்போது கர்காய் அணை திட்டத்தை கைவிட்டது.