Tamilசெய்திகள்

பாஜக தேர்தலில் போட்டியிட முஸ்லிம்களுக்கு டிக்கெட் கொடுக்காதது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி அரியானாவில் நேற்று பேசும் போது வக்பு திருத்த சட்டம் தொடங்க காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். முஸ்லிம்கள் மீது உண்மையான அனுதாபம் இருந்தால் அவர்க ளுக்கு 50 சதவீத தேர்தலில் போடடியிட டிக்கெட் வழங்குங்கள் என்று தெரி வித்து இருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மேல்சபை எம்.பி. இம்ரான் பிராப் கர்ஹி கூறியதாவது:-

பிரதமருக்கு இது போன்ற கருத்து பொருத்தமானதல்ல. நீங்கள் காங்கிரசை பார்த்து முஸ்லிம்கள் அனுதாபிகள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் அவர்களை வெறுக்கிறீர்களா? இல்லையென்றால் முக்தர் அப்பாஸ் நக்வி, ஷாவாஸ் உசேன், எம்.ஜே.அக்பர், ஜாபர் இஸ்லாம் ஆகியோரை குப்பை தொட்டியில் போட்டது ஏன்?

வக்பு திருத்த சட்டம் மூலம் முஸ்லிம்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் பாராளுமன்ற மக்களவையில் அதைமுன்வைக்க உங்களிடம் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லை. முஸ்லிம் பெண்களின் உரிமை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். மக்களவை அல்லது மேல்சபை, மாநில சட்டசபைகளில் உங்களிடம் ஒரு முஸ்லிம் பெண் உறுப்பினர் கூட இல்லை என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஹிரினேட் கூறும்போது, “பாஜகவில் ஏன் தலித் முதல்வர் இல்லை” என்று கேள்வி எழுப்பினார். சமாஜ்வாதிகட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபுஆஸ்மி கூறும்போது, “பாஜக தேர்தலில் போட்டியிட முஸ்லிம்களுக்கு டிக்கெட் கொடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.