X

பாசனத்திற்காக பெரியார் அணை திறப்பு – முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் பாசனத்திற்காக 18.10.2019 முதல் 120 நாட்களுக்கு மொத்தம் 1037 மி.க.அடிக்கு மிகாமல் நீர் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் 5146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பெரியாறு அணையிலிருந்து 18-ம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள 4614.25 ஏக்கர் ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து 18.10. 2019 முதல் 30 நாட்களுக்கு, விநாடிக்கு 98 கனஅடி வீதம், மொத்தம் 255 மில்லியன் கன அடி தண்ணீரினை, பாசனத்திற்கு திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags: south news