தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபாஸ், ‘பாகுபலி’ படம் மூலம் உலகளவில் மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் தற்போது ‘சாஹோ’ திரைப்படம் உருவாகியுள்ளது.
‘சாஹோ’ படத்தின் விளம்பரத்துக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார் பிரபாஸ். அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் பாகுபலி 3 சாத்தியமா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பிரபாஸ், “ராஜமவுலி 3-வது பாகம் எடுக்க நினைத்தால் அதற்கு அவர் ஆர்வத்துடன் செயல்படுவார். அவர் என்னிடம் இதுவரை 6 கதைகளைத் தான் கூறியுள்ளார். அப்படியென்றால் அவரிடம் 10-14 கதைகள் இருக்கும். ஐந்து வருடங்களாக ஒரு கதையை மனதில் வைத்திருந்தார் என்பது தெரியும். ஆனால் பாகுபலி 3, சாத்தியமா, இல்லையா? என்று தெரியாது. அமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி கதாபாத்திரங்களை என் உடலில் இருந்து பிரிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.