Tamilவிளையாட்டு

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமுக்கு அறிவுரை கூறிய மியான்தத்

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக விராட் கோலி உள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

ஏனென்றால், பாபர் அசாமின் ஸ்ட்ரோக் மற்றும் ஷாட்டுகள் விராட் கோலியை போன்ற கிரிக்கெட் ஷாட்டுகளாக உள்ளன. இருந்தாலும் தன்னை விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டாம் என்று பாபர் அசாம் கூறி வருகிறார். அவருடன் ஒப்பிட்டால் தனது ஆட்டத்தின் திறன் குறைந்து விடும் என நினைக்கிறார்.

இந்நிலையில் விராட் கோலியுடன் ஒப்பிடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என பாபர் அசாமுக்கு மியான்தத் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து மியான்தத் கூறுகையில் ”பாபர் அசாம் அற்புதமான பேட்ஸ்மேன். ஆனால், தனது நாட்டிற்காக அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும். என்னுடைய அனுபவத்தை வைத்து நான் சொல்வது, என்னை யாருடனும் ஒப்பிடுவதால் நான் கவலைப்படுவதில்லை. ஆனால், தொடர்ச்சியாக அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்பதுதான். என்னுடைய பேட் அதுபற்றி பேசும். இதைத்தான் பாபர் அசாமுக்கு அறிவுரையாக வழங்குகிறேன்.

நீங்கள் போதுமான அளவிற்கு ரன்கள் அடித்த பின்னர், உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து பெருமை அடையும்போதுதான் நீங்களாகவே மற்றொரு வீரருடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடிய நேரம். அதற்கு முன் ஒப்பிட்டு பார்க்க நேரம் இல்லை. ஒப்பிட்டு குறித்து கவலைப்பட தேவையில்லை என்பதுதான் என்னுடைய அட்வைஸ். அதில் கவனம் செலுத்தாமல், அதிக அளவில் ஸ்கோர் குவிக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *