பாகிஸ்தான் விமான பயிற்சி தளத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி தளம் உள்ளது. பாதுகாப்பு நிறைந்த இந்த தளத்தின் மீது, இன்று காலை ஆயுதமேந்திய பயங்கரவாத குழு திடீரென தாக்குதல் நடத்தியது.

இதை சற்றும் எதிர்பார்க்காத நிலையில், பாதுகாப்புப்படையில் இருந்த வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மூன்று பேர் சுற்றி வளைக்கப்பட்டனர். இருந்த போதிலும், மூன்று விமானங்கள் சேதமடைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பாதுகாப்புப்படை நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை அகற்றுவதில் உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் சுமார் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்குள் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news