பாகிஸ்தான், வங்காளதேச முஸ்லீம்களை வெளியேற்ற வேண்டும் – சிவசேனா

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

குறிப்பாக மத அடிப்படையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த இஸ்லாமியர் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. அந்த நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு அகற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என சிவசேனா கூறி உள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா பத்திரிகையில் இது தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அதில், ‘பாகிஸ்தான் மற்றும் வங்கதேச இஸ்லாமியர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. சிவசேனா எப்போதும் இந்துத்துவாவுக்காக போராடியது. குடியுரிமை திருத்த சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளன. அவை சரிசெய்யப்பட வேண்டும். மகாராஷ்டிராவில் ஐந்து ஆண்டுகளில் பாஜகவால் செய்ய முடியாத பணிகளை, இப்போதைய மகா கூட்டணி 50 நாட்களில் செய்துள்ளது.’ என சிவசேனா கூறி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news