வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் தொடக்க வீரர்களான அபித் அலி 39 ரன்னிலும், ஷபிக் 25 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய அசார் அலி, கேப்டன் பாபர் அசாம் ஜோடி நிதானமாக விளையாடியது. பாபர் அசாம் பொறுப்புடன் அரை சதமடித்தார்.
முதல் நாள் முடிவில், பாகிஸ்தான் அணி 57 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அசார் அலி 36 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் 60 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் நேற்று நடைபெற்றது. 6.2 ஓவர்கள் வீசிய நிலையில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. அசார் அலி 52 ரன்னுடனும், பாபர் அசாம் 71 ரன்னிடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.
மழை தொடர்ந்து பெய்ததால் இரண்டாம் நாள் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டது.