X

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானு பிடிவாரண்ட் – நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சித்தலைவருமான இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் விசாரணை தீவிரமடைந்து உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார். அவர் மீது ஊழல், தேச துரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த மாதம் இம்ரான்கான் கோர்ட்டுக்கு வந்த போது அவரை துணை ராணுவம் கைது செய்தது. இதனால் நாடுமுழுவதும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கலவரத்தை தூண்டியதால் இம்ரான்கான் மீது பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது.

இந்தநிலையில் நேற்று இம்ரான்கான் உள்ளிட்ட அவரது கட்சி தலைவர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: tamil news