X

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தங்கை இறப்பு – கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தனது சகோதரியின் மறைவு செய்தியை சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். அவர் தனது சகோதரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இருந்தார். இதனால் தனது பயண திட்டத்தை கூட நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் தனது சகோதரி பரிதாபமாக இறந்தார் என்ற செய்தியை சமூக வலைதளம் மூலம் அறிவித்தார். மேலும் தனது சகோதரியின் இறுதி சடங்கு எங்கு, எப்போது நடைபெறும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

அப்ரிடியின் சகோதரியின் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags: tamil sports