பாகிஸ்தான் பெண்ணுக்கு தகவல் அனுப்பிய ஆந்திர சி.ஐ.எஸ்.எப் வீரர் – 9 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் எக்கு ஆலை பாதுகாப்பு படை பிரிவில் சி.ஐ.எஸ்.எப். வீரர் கபில்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த தமிஷா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இளம் பெண்ணுடன் அவர் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
அவரது நடமாட்டத்தில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரது செல்போனை கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாகிஸ்தான் பெண்ணுக்கு அவர் ரகசிய தகவல்களை அனுப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் கபில் குமாரின் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கபில்குமாருடன் தொடர்பில் இருந்த பாகிஸ்தான இளம் பெண் தமிசா (பி. ஐ.ஓ) பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சி.ஐ.எஸ்.எப். வீரர் கபில்குமார் மீது 9 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாகிஸ்தான் பெண்ணுக்கு அவர் ஏதாவது முக்கிய தகவலை அளித்தாரா என்பதை கண்டறிய அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவரது செல்போன் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபில்குமாரின் செல்போன்களை சரிபார்த்த போது அவரது சமூக ஊடக கணக்குகளில் உள்ள அனைத்து செய்திகளும் நீக்கப்பட்டு இருந்தன. அவர் முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் 3 செல்போன்களை பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம். இதுவரை எந்த ஆதாரமும் இல்லாததால் அவர் கைது செய்யப்படவில்லை. தடயவியல் ஆய்வுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்கள் எல்லை தாண்டி காதல் வலை வீசி வருகின்றனர். இதன் மூலம் சதி திட்டம் திட்ட வாய்ப்புள்ளது. சமூக ஊடகங்களில் பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்களுடன் தொடர்பு வைக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.