Tamilவிளையாட்டு

பாகிஸ்தான் பந்து வீச்சு பலமாக உள்ளது – இந்திய அணிக்கு கங்குலி எச்சரிக்கை

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், பாகிஸ்தானின் ஷதாப் கான் 4 விக்கெட் கைப்பற்றினார். ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், நசீம் ஷா மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இதனையடுத்து பாகிஸ்தான் அணி 2-வது போட்டியில் இந்தியாவிடம் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவைப் போலவே அவர்களும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இது குறித்து சவுரவ் கங்குலி கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானுக்கு மிகச் சிறந்த பந்துவீச்சு தாக்குதல் உள்ளது. நசீம் ஷா, அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவ்ஃப். இந்தியாவைப் போலவே அவர்களும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். எனவே அவர்கள் ஒரு சிறந்த பந்துவீச்சு தாக்குதல் மற்றும் இந்தியா அவர்களுக்கு எதிராக நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி இந்திய வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.