பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 16 வயது இளைஞர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரராக, 16 வயதே ஆன நசீம் ஷா களமிறங்கி உள்ளார். இவர் மணிக்கு 145 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர்.

டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவருக்கு டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை பயிற்சியாளர் வாக்கார் யூனுஸ் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நசீம் ஷா பயிற்சி ஆட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தபோது, அவரது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துபோனார். ஆனால், இறுதிச்சடங்கிற்கு செல்லாமல் தாயார் ஆசைப்பட்டபடி தொடர்ந்து பயிற்சி ஆட்டத்தில் நசீம் விளையாடினார்.

மிக இளம் வயதில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வீரர்களில் நசீம் ஷாவும் ஒருவர். ஒருசில வீரர்கள் மட்டுமே 16 வயதில் அறிமுகமாகி உள்ளனர். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, பின்னாளில் உலகமே உற்றுநோக்கும் கிரிக்கெட் ஜாம்பவானாக உருவெடுத்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசன் ரசா, தனது 14வது வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news