பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்வு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 400 பேர் கலந்துக் கொண்டினர்.
ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியானது.
மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை நேற்று வரை 54 ஆக இருந்த நிலையில் இன்று 63ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாவும், பெஷாவர் மற்றும் டைமர்கெராவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கைபர் பக்துன்வா குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.