பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் உறவினரும், அந்த அணியின் இளம் கிரிக்கெட் வீரரும் இமாம் உல் ஹக் ஆவார். இமாம், தங்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக 8 இளம் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து ஒரு நெட்டிசன் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சில பெண்களுடன் இமாம், நடத்திய வாட்ஸ் அப் சாட்களை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள சாட்டில், இமாம் அந்த பெண்களிடம் காதலிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அவர்களின் புகைப்படங்களையும் கேட்டுள்ளார். பின்னர் நான் உன்னை காதலிக்கிறேன். ஆனால், என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் இமாம் பதில் கூறியுள்ளார்.
இந்த சாட்களை சமூக வலைத்தளங்களில் பார்த்த நெட்டிசன்கள், இமானுக்கு எதிராக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு இமாம் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.