பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் இருந்து இங்கிலாந்து விலகல்

கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்த போதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. அதற்கு நன்றிக்கடனாக பாகிஸ்தான் சென்று கிரிக்கெட்டில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சம்மதம் தெரிவித்தது.

அதன்படி அடுத்த மாதம் பாகிஸ்தான் சென்று இரண்டு டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் டி20 போட்டியில் விளையாடுவதில் இருந்து விலகியுள்ளது.

முன்னதாக, நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி நடைபெறுவதற்கு சற்றுமுன் தொடரில் இருந்து விலகியது. இந்த நிலையில் இங்கிலாந்தும் விலகியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools