Tamilவிளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை விமர்சித்த ஜூனைத்கான்

பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத்கான். 31 வயதான இவர் 22 டெஸ்டில் 71 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 76 ஒருநாள் போட்டி மற்றும் 9 இருபது ஓவரில் விளையாடினார்.

2019-ம் ஆண்டில் இருந்து அவர் பாகிஸ்தான் அணிக்கு தேர்வு செய்யப்படாமல் உள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் தேர்வு குழு மீது ஜூனைத்கான் கடுமையாக பாய்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கேப்டனுடனும், அணி நிர்வாகத்துடனும் நமக்கு நல்ல நட்பு தொடர்ந்தால் தான் அனைத்து விதமான போட்டிகளிலும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். நமது திறமையை நிரூபிக்கலாம்.

ஆனால் கேப்டனுடனும், நிர்வாகத்துடனும் நெருக்கமாக இல்லாவிட்டால் அணியில் இருந்து நீக்கப்படுவீர்கள். இதுதான் பாகிஸ்தான் அணியின் நிலைமை.

நான் பாகிஸ்தான் அணியில் 3 வடிவிலான போட்டிகளில் விளையாடினேன். ஆனால் நான் ஓய்வு கேட்காமல் எனக்கு நிர்வாகம் ஓய்வு அளித்துவிட்டது.

என்மீதான திடீர் வெறுப்புகளால் என்னை தேர்வு செய்யவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், எனக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை.

மற்ற நாடுகளில் வேகப்பந்து வீரர்களின் சுமையை எவ்வாறு கையளாளுகிறார்கள் என்பதை பாகிஸ்தான் தேர்வாளர்களும், நிர்வாகத்தினரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.