பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு டெஸ்டிலும் இன்னிங்ஸ் தோல்வியையே தழுவியது.
பாகிஸ்தான் அணி கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு வெற்றி அல்லது டிரா கூட பெற முடியாத நிலையை அடைந்துள்ளது. இதுவரை 14 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
வெளிநாட்டு மண்ணில் ஒரு அணி தொடர்ந்து 14 போட்டிகளில் தோல்வியடைந்த ஒரே அணி என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. அத்துடன் தொடர்ந்து ஐந்து தொடர்களிலும் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.