பாகிஸ்தான், இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் – இன்று தொடங்குகிறது

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே கார்டிப்பில் நடந்த ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று நடக்கிறது.

உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த போட்டியில் தொடரை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் இந்த போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் வெல்ல வேண்டியது அவசியமானதாகும்.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 82 ஒரு நாள் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தி இருக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி 49 முறையும், பாகிஸ்தான் அணி 31 முறையும் வென்று இருக்கின்றன. 2 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news