பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்ற அமெரிக்க பெண் எம்.பி – இந்தியா கண்டனம்

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற பெண் இல்ஹான் ஒமர் 4 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர்
இம்ரான்கான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதன்பின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கும் சென்றுள்ளார்.

தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 20-ம் தேதி அமெரிக்க எம்.பி. இல்ஹான் ஒமர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை சந்தித்துப் பேசி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பார்வையிட்டார். இந்தியா-பாகிஸ்தான்
பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதைப் போல செயல்படுகிறார் என தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்களை உக்ரைன் நாட்டிற்கு எடுத்துச் செல்ல ஜப்பான் அரசு அனுமதி கோரியது. இதற்கு மும்பையில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிக
ரீதியிலான விமானம் மட்டுமே தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் விளக்கமளித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools