X

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்பராஸ் தொடர்கிறார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்பராஸ் அகமது இருந்து வருகிறார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறாததால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அணியில் சீர்திருத்தங்கள் கொண்டு வர முடிவு செய்தது.

அதன்படி தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் அதிரடியாக நீக்கப்பட்டு மிஸ்பா-உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் சர்பராஸ் அகமதும் நீக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடுகிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்பராஸ் அகமது செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேப்டனாக நீட்டிக்கப்பட்டுள்ளார். முன்னணி பேட்ஸ்மேனாக திகழும் பாபர் ஆசம் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags: sports news