பாகிஸ்தானுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி – ஆஸ்திரேலியா முதல் நாளில் 5/232

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ராவல்பிண்டி, கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட்
போட்டியும் டிராவில் முடிந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களமிறங்கினர். வார்னர் 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

உஸ்மான் கவாஜா பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் கவாஜா 91 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய லபுசேன் டக் அவுட்டானார்.
டிராவிஸ் ஹெட் 26 ரன்னில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அரை சதமடித்து, 59 ரன்னில் வெளியேறினார்.

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய 5 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. கிரீன் 20 ரன்னும், அலெக்ஸ் கேரி 8 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா மற்றும் அப்ரிடி தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools