பாகிஸ்தானுக்கு எதிரான 3 வது டெஸ்ட் – ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு ஆல் அவுட்
பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 133.3 ஓவரில் 391 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. உஸ்மான் கவாஜா பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்து, 91 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஸ்டீவ் ஸ்மித் அரை சதமடித்து 59 ரன்னில் வெளியேறினார். கிரீன் 79 ரன்னும், அலெக்ஸ் கேரி 67 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா மற்றும் ஷாஹின் அப்ரிடி தலா 4 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 11 ரன்னில் வெளியேறினார்.
இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபிக் 45 ரன்னும், அசார் அலி 30 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.