பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் – வங்காளதேசம் 233 ரன்களுக்கு ஆல்-அவுட்
பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணியின் தமிம் இக்பால், சாய்ஃப் ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சாய்ஃப் ஹசன் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். தமிம் இக்பால் 3 ரன்னில் வெளியேறினார்.
3 ரன்கள் எடுப்பதற்குள் வங்காளதேசம் தொடக்க பேட்ஸ்மேன்களை இழந்து திண்டாடியது. அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு நஜ்முல் ஹொசைன் ஷான்டோ உடன் கேப்டன் மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
என்றாலும் மொமினுல் ஹக் 30 ரன்னிலும், நஜ்முல் ஹொசைன் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முகமது மிதுன் 140 பந்துகளை சந்தித்து 63 ரன்கள் அடிக்க வங்காளதேசம் 82.5 ஓவரில் 233 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.
பகிஸ்தான் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், முகமது அப்பாஸ் மற்றும் ஹாரிஸ் சோஹைல் ஆகியோ் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.