பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டி – இங்கிலாந்து வெற்றி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்ற்து. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் 68 ரன்களும், பாபர் அசாம் 31 ரன்களும் எடுத்தனர். இப்திகார் அகமது 28 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் லூக் வுட் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆதில் ரஷித் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹாரி புரூக் அதிரடியாக ஆடி அணியை வெற்றிபெற வைத்தார்.
இறுதியில், இங்கிலாந்து 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹாரி புரூக் 42 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். இதன்மூலம் டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது.