X

பாகிஸ்தானில் கார் – பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து – 30 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் கில்கித்-பல்திஸ்தான் மாகாணத்தின் கில்கித்தில் இருந்து ராவல்பிண்டி நோக்கி நேற்று இரவு பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. டைமிர் மாவட்டம் ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது பஸ் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பஸ்சும், காரும் மலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.