பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தூதரக பொறுப்பு அதிகாரி கவுரவ் அலுவாலியா தேசியகொடியை ஏற்றி வைத்து இந்திய ஜனாதிபதியின் சுதந்திர தின உரையை வாசித்தார்.
விழாவில் தூதரக ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவலை பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. மேலும் தூதரகத்தில் நடந்த சுதந்திர தின விழா புகைப்படங்களும் டுவிட்டரில் வெளியிடப்பட்டு உள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை கண்டித்து, பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதர் அஜய் பைசாரியாவை அந்நாடு திருப்பி அனுப்பியது நினைவு கூரத்தக்கது.