ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமானோர் பாகிஸ்தான் சென்று அகதிகளாக உள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியையும் நாங்கள் பார்க்கவில்லை என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ”பாதுகாப்பான இடத்தை தேடும் பல ஆப்கானிஸ்தானியர்களுக்கு, பாகிஸ்தான் வழங்கிய நம்பமுடியாத வகையிலான மனப்பான்மைக்கு நன்றியுள்ளவராக இருக்கிறோம். பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சவால்களில் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். பயங்கரவாத எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான திறனில் தீவிரமாக அக்கறை செலுத்த இருக்கிறோம் என்பதை அதிபர் ஜோ பைடன் தெளிவாக தெரிவித்துள்ளார்” என்றார்.