Tamilவிளையாட்டு

பாகிஸ்தானின் பலமே பந்து வீச்சு தான் – இங்கிலாந்து முன்னாள் வீரர் கருத்து

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 1-0 என தொடரைக் கைப்பற்றியது.

முதல் போட்டியில் பாகிஸ்தானின் பந்து வீச்சு அருமையான இருந்தது. ஆனால் 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கில் சொதப்பியதால் வெற்றியை நழுவிட்டது. கடைசி இரண்டு போட்டிகளும் மழையால் பாதிப்பால் டிரா ஆனது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பலமே பந்து வீச்சுதான், பேட்டிங் இல்லை என்று முன்னாள் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மோன்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பனேசர் கூறுகையில் ‘‘ஆடுகளம் ஸ்விங் மற்றும் சீமிங் ஆகியவற்றிற்கு ஒத்துழைக்கவில்லை என்றால், பேட்ஸ்மேன்களை தவறு செய்ய வைத்து விக்கெட்டுகளை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது பந்து வீச்சாளர்களுக்கு தெரியவில்லை. இதுபோன்ற பிரச்சினையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியவரிடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பந்து வீச்சுதான். அவர்களுடைய பேட்டிங் அல்ல. பாகிஸ்தான் ஒரு அணுகுமுறையைக் கொண்டுள்ளது, இது அவர்கள் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக மாற விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

மிஸ்பா உல் ஹக், யூனிஸ்கான் மற்றும் முஷ்டாக் அகமது பயிற்சியில் இந்த புதிய அணி அவர்களுடைய அணுகுமுறையால் பாராட்டு பெற்றனர். பழைய அணிகளில் இதுபோன்று பார்க்க முடியாது’’ என்றார்.