பாகிஸ்தானிடம் பிடிபட்ட விமானிக்கு நாடு துணை நிற்கும் – அகிலேஷ் யாதவ்

பாகிஸ்தான் எல்லையில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பிடித்து வைத்திருப்பதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று வெளியிட்ட தன்னுடைய டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு மனஉறுதி மற்றும் தைரியத்தை வழங்கவும் கடவுளிடம் நான் வேண்டி கொள்கிறேன். இந்த நாடும், நாட்டு மக்களும் அவருக்கு எப்போதும் துணை நிற்பார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் எல்லையில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வீரர்களின் தீரச்செயலுக்கு அகிலேஷ் யாதவ் பாராட்டும் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools