பவன் கல்யாண் படத்தில் அமைச்சர் நடு ரோட்டில் ஆடுவது போல் காட்சி – ஆந்திரா நீர்வளத்துறை அமைச்சர் எதிர்ப்பு

ஆந்திராவில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் நடித்த ப்ரோ படம் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியை சேர்ந்த அமைச்சர் அப்பத்திரம் பாபுவை கிண்டல் அடிப்பது போல காட்சி இடம் பெற்றுள்ளது.

நகைச்சுவை நடிகர் ப்ருத்விராஜ், அமைச்சரைப் போன்ற உடை அணிந்து சாலையில் நடனமாடுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது ஆளுங்கட்சியினர் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் அம்பதி ராம்பாபு கூறியதாவது:-

“நடிகர்களாக மாறிய அரசியல்வாதிகள் என்.டி.ராமராவ் அல்லது சிரஞ்சீவி அரசியலில் தீவிரமாக இருந்தபோது திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால், பவன் கல்யாண் திரைப்படம் மற்றும் அரசியல் இரண்டையும் விரும்பி, இரு துறைகளுக்கும் அநீதி இழைத்து வருகிறார்”. பவன் கல்யாண் என்னை அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாததால், என்னைக் கொச்சைப்படுத்த ஷியாம்பாபு என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.

என்னோட கேரக்டருக்கு ‘ராம்பாபு’ என்று பெயர் வைத்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. யாரையாவது குறிவைத்து படம் எடுத்தால் வெற்றியடையாது என்பதை படக்குழுவினர் உணர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema