Tamilசெய்திகள்

பள்ளி மாணவன் இறப்பு – அலட்சியமாக செயல்பட்ட இரண்டு அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்

காரைக்கால் அருகே கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகன்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.

மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது, போலீசாரும், மருத்துவர்களும் அலட்சியமாக செயல்பட்டதால் தான், மாணவன் உயிரிழந்தான் என, போலீசார் மற்றும் மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேன்டும் என காரைக்காலின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த விவகாரத்தில் சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவர் இறந்த விவகாரத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு பேரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜியை சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். உரிய சிகிச்சை தரவில்லை என உறவினர்கள் புகார் கூறிய நிலையில், சரியான மருத்துவம் பார்க்கப்பட்டதாக அரசின் குழு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.