Tamilசெய்திகள்

பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் வருகிற 15-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கும் விவகாரத்தில் அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களே இறுதி முடிவு எடுக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

முதன்மை கல்வி அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனையில் பள்ளிகள் திறப்பு, தேர்வு, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார். பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம். 8 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை உள்ளாட்சித் துறை உதவியுடன் தயார்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.