X

பள்ளிகளில் சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. முன்னதாக 1 முதல் 8 வகுப்புகள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 12ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுமுறையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 5 முட்டைகளையும் சேர்த்து வழங்க வேண்டும். ஜனவரி மாத‌த்திற்கான வேலை நாட்களை கணக்கிட்டு பொருட்களை விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.