பல விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் பல விருதுகளை குவித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி 2023 ஆண்டுக்கான ஜேஎஃப்டபல்யூ விருதுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறந்த நடிகையாக திரிஷாவும், சிறந்த ஆடை வடிவமைப்பாளராக எலகான், சிறந்த பாடலாசிரியருக்காக கிருத்திகா நெல்சன், சிறந்த டப்பிங் கலைஞராக தீபாவெங்கட் (ஐஸ்வர்யா ராய் பச்சன்-நந்தினி), சிறந்த நடிகைக்கான விமர்சகர்கள் தேர்வில் ஐஸ்வர்யா லெக்ஷ்மியும் விருதுகளை வென்றுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools