Tamilசினிமா

பல தோற்றங்களில் மாதவன் – வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கில் வெளியான சைலன்ஸ் படத்துக்கு பிறகு மாதவன் மாறா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் வருகிறார். திலீப் குமார் இயக்கி உள்ளார். இந்த படம் அடுத்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையாக தயாராகும் ராக்கெட்ரி படத்தில் நடித்து இயக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த நிலையில் மாதவன் புதிய தோற்றத்தில் இருக்கும் தனது புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். கதாநாயகன், வில்லன், மன்னர் என்ற பல தோற்றங்களில் இந்த புகைப்படங்கள் உள்ளன.

இவை வலைத்தளத்தில் வைரலாகின்றன. அவை தான் நடித்து திரைக்கு வராமல் போன படங்களின் தோற்றங்கள் என குறிப்பிட்டுள்ளார். சில படங்களில் மாதவன் கவுரவ தோற்றங்களில் வந்தார். இனிமேல் அதுபோன்று நடிக்கவில்லை என்றும், அடுத்த 2 வருடங்களுக்கு முழுக்க எனது படங்களாகவே வரும் என்றும் தெரிவித்து உள்ளார்.