தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 3 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்ந்தெடுக்க யு.ஜி.சி. பிரதிநிதியை (பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதி) தேடுதல் குழுவில் சேர்க்க வேண்டும் என்று கவர்னர் நிபந்தனை விதித்து உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக துணை வேந்தர் நியமனத்தில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள்படி பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தரை நியமிக்க யு.ஜி.சி. விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யு.ஜி.சி. சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை. எனவே ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்றலாம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.