லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். இந்தபடத்தில் விஜய்யும் – விஜய் சேதுபதியும் மோதிக்கொள்ளும் ஆக்சன் காட்சி பிரமாண்டமாக படமாக்கப்படுகிறது.
படத்தில் நடிக்கும் மாளவிகா மோகனனுக்கும் ஒரு ஆக்சன் காட்சி உள்ளதாம். அதற்காக தற்காப்பு கலை பயிற்சி எடுத்து வருகிறார். இந்த படத்திற்காக மாளவிகா பற்களர் என்னும் மார்ஷியல் ஆர்ட்ஸை கற்று கொண்டு வருகிறாராம். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியாவுக்கும் சில சண்டை காட்சிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னதாக பட்டாஸ் படத்திற்காக நடிகை சினேகா, அடிமுறை என்னும் தற்காப்பு கலையையும், அதோ அந்த பறவை போல படத்திற்காக நடிகை அமலாபால், கிராமகா என்ற தற்காப்பு கலையை கற்றுக் கொண்டு நடித்தனர். இவர்கள் வரிசையில் நடிகை மாளவிகா மோகனனும் இணைந்திருக்கிறார்.