X

பராமரிப்பு பணிக்காக மும்பை விமான நிலையம் மே 2 ஆம் தேதி 6 மணி நேரம் மூடப்படுகிறது

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைகள் பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிக்காக வரும் மே மாதம் 2ம் தேதி 6 மணி நேரம் மூடப்படும் என்று விமானப்படையினருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, மே 2ம் தேதி அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விமான நிலைய ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்படும் என்றும் 5 மணிக்கு மேல் வழக்கம் போல் ஓடுபாதைகள் இயங்கும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விமான நிலையத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.