X

பரத் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்

பாய்ஸ், செல்லமே, காதல், வெயில், ஸ்பைடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பதித்தவர் நடிகர் பரத். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நடுவண் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022-ல் தேர்வானது.

தற்போது எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ’மிரள்’. இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார். பாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கலைவாணன்.ஆர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

ஸ்லாஷர் த்ரில்லராக உருவாகியுள்ள ’மிரள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகிவுள்ளது. இதனை, நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிந்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

இதற்குமுன் ஆஷஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளியான ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் என பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.