பரத்தின் 50 வது திரைப்படம்! – பூஜையுடன் தொடங்கியது

 

பாய்ஸ், செல்லமே, காதல், வெயில், ஸ்பைடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பதித்தவர் நடிகர் பரத். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவரின் 50-வது திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பரத்தின் 50-வது படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது. இதனை தயாரிப்பாளர் எஸ்.தாணு தொடங்கி வைத்துள்ளார்.

திரில்லர் கதை அம்சம் கொண்டு உருவாகும் இப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். அவர்களுடன் விவேக் பிரசன்னா, பிக்பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆர்.பி.பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
மேலும் இப்படத்தில் பணிபுரியவுள்ள மற்ற கலைஞர்கள் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools