பயிற்சியை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி – ரோகித் சர்மா பங்கேற்பு

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன.

நான்காவது ஊரடங்கு முடிவடைவதற்கு முன், வெளிப்புற மைதானத்தில் பயிற்சியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால் வீரர்கள் இன்னும் பயிற்சியை தொடங்கவில்லை.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான மும்பை இந்தியன்ஸ் மும்பை நகருக்கு வெளியில் உள்ள கான்சோலி ரிலையன்ஸ் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயிற்சியில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ஆத்திய டரே, தவால் குல்கர்னி போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், நிர்வாகம் எந்தவொரு வீரரையும் பயிற்சிக்கு வருமாறு கட்டாயப்படுத்தவில்லை.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் ஐபிஎல் போட்டியை நடத்த ஆயத்தமாகி வருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news