இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னையில் நடைபெற்ற உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவர் ஆடவில்லை.
சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 80 சதவீதம் குணமடைந்து விட்டார் என பிசிசிஐ மருத்துவ குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உடல் நலம் முன்னேறி வரும் நிலையில், சுப்மன் கில் அகமதாபாத்துக்கு சென்றடைந்தார். அங்கு அவர் தனது பயிற்சியை தொடங்கி உள்ளார். இதனால் அகமதாபாத்தில் 14-ந்தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் இந்திய அணியில் இடம் பிடித்தால் இஷான் கிஷன் வெளியேறுவார். அவர் 2 போட்டியில் விளையாடி 47 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.