X

பயிற்சியாளர்களை கிரிக்கெட் வீரர்கள் மதிப்பதில்லை – சேவாக் வருத்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் சேவாக். இவர் மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ‘‘மற்ற விளையாட்டுத்துறையைச் சேர்ந்த வீரர்கள், அவர்களுடைய பயிற்சியாளர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்று கிரிக்கெட் வீரர்கள் கொடுப்பதில்லை.

கிரிக்கெட் வீரர்கள் நாட்டிற்காக விளையாடத் தொடங்கும்போது அவர்களுடைய பயிற்சியாளர்களை மறந்து விடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் பயிற்சியார்களுடன் அதிக அளவில் பேசுவதில்லை, சந்திப்பதில்லை. ஆனால், மற்ற போட்டிகளில் வீரர்களுக்கு தொடக்கத்தில் இருந்து இறுதி வரை பயிற்சியாளர்கள் தேவைப்படுகிறார்கள். பயிற்சியாளர்கள் அவருடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்’’ என்றார்.

Tags: sports news