போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்த ஆண்டு 2023 ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முடிந்து சென்னைக்கு திரும்ப வரும் பயணிகளின் வசதிக்காக இன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 1213 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3313 பேருந்துகள் இயக்கப்படுகிறது மற்றும் பிற பகுதிகளிலிருந்து முக்கிய தொழில் நகரங்களுக்கு செல்லும் வகையில் 1846 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.